உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவானைக்கோவிலில் ஆடிப்பூர தெப்போற்சவம்

திருவானைக்கோவிலில் ஆடிப்பூர தெப்போற்சவம்

ஸ்ரீரங்கம்: திருவானைக்கோவில் ஸ்ரீஜெம்புகேஸ்வரர் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆகஸ்ட் 4ம் தேதி ஆடிப்பூர தெப்ப உற்சவ விழா நடக்கிறது. பஞ்ச பூத திருத்தலங்களில் நீர் தலமாக போற்றி புகழப்படுவது திருவானைக்கோவில் ஸ்ரீஜெம்புகேஸ்வரர் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி கோவில் ஆகும். அம்மன் அவதரித்த தினமாக ஆடி பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு திருவானைக்கோவில் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி கோவிலில் தெப்ப உற்சவம் மிகவும் விமரிசையுடன் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு வரும் நான்காம் தேதி ஆடிப்பூர தெப்ப உற்சவ விழா நடக்கிறது. மாலை ஆறு மணிக்கு ஸ்வாமிக்கும், அம்மனுக்கும் விசேஷ பூஜைகள், இதை தொடர்ந்து உபயதாரர்கள் மரியாதை நிகழ்ச்சி நடந்த பிறகு இரவு 7.30 மணிக்கு கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஆடி தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவ விழா நடக்கிறது. அம்மன் ஐந்துமுறை வலம் வந்து மைய மான்யத்தை அடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் உதவி ஆணையர் ஆனந்த் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !