உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உச்சிப்பிள்ளையார் கோவில் கொடி மரத்தில் தங்கத் தகடுகள் பதிப்பு!

உச்சிப்பிள்ளையார் கோவில் கொடி மரத்தில் தங்கத் தகடுகள் பதிப்பு!

திருச்சி: திருச்சி, மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புதிய கொடி மரத்தில், 400 கிராம் தங்கத் தகடுகள் நேற்று பதிக்கப்பட்டுள்ளது. திருச்சி மலைக்கோட்டை, தாயுமான ஸ்வாமி கோவிலில் தாயுமான ஸ்வாமி, மாணிக்க விநாயகர் மற்றும் உச்சிப்பிள்ளையார் சன்னதிகள், ராஜகோபுரம், கருவறை விமானங்கள் ஆகியவற்றின் விக்ரகங்களுக்கு, 16.88 லட்சம் ரூபாயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோவிலில் புதிதாக நடப்பட்டுள்ள, 36 அடி உயர கொடி மரத்துக்கு, 400 கிராம் தங்கத்தில் செய்யப்பட்ட தகடுகளுக்கு, எலக்ரோ பிளேட்டிங் முறையில் தங்க முலாம் பூசப்பட்டு, நேற்று மாலை கொடி மரத்தில் பதிக்கப்பட்டன. கொடி மரத்தின் கீழ்ப் பகுதியில் திசா விக்ரகங்களுடன் கூடிய தகடு பொருத்தப்பட்டது. மாணிக்க விநாயகர் சன்னதி கோபுரத்துக்கான ஐந்து கலச கும்பங்கள் புதுப்பிக்கப்பட்டு, பாலிஷ் போடும் பணியில் ஸ்தபதிகள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !