மதுரை கூடலழகர் கோயிலில் அத்யயனத் திருவிழா 10ம் தேதி துவக்கம்!
மதுரை: திருவரங்கப் பெருநகரில் அரங்கநாதர் திருவுள்ளப்படி திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகப் பாசுரங்களை பெரியபெருமாள் திருமுன் அமர்ந்து இனிய பண்களில் இசைத்தார். இக்கைங்கர்யத்தில் மனங்குளிர்ந்த எம்பெருமான் வெகுமதியாக வரம் ஒன்று தர இசைந்தார். அக்கணம் திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழிப் பாசுரங்கள் வடமொழி வேதங்களுக்கு இணையாக இவ்வுலகம் போற்றுமாறு விளங்க அருள் புரிய வேண்டும் என்ற வரம் வேண்டினார்.
அதன்படி எம்பெருமானும் வைகுண்ட ஏகாதசிக்கு முன்பான பத்து நாட்களில் இரவு நேரத்தில் மதுரகவி ஆழ்வார் எம்பெருமான் முன்பு இத்திருவாய் மொழிப் பாசுரங்களை இசைக்கத் திருச்செவி சாத்தினார். இதுவே இராப்பத்து உற்சவமாக வழங்கலாயிற்று. சிற்சில காரணங்களால் இது தடைப்பட்டது. பின்பு நாதமுனிகள் வைகுண்ட ஏகாதசியை மையமாக வைத்து முதல் பத்து நாட்கள் பகல்பத்து உற்வசமாகவும், இரண்டாவது பத்து நாட்கள் இராப்பத்து உற்சவமாகவும் தொடங்கி இவ்விழாவிற்கு அத்யயன உற்சவம் என நாமகரணம் இட்டார். இவ்வுற்வம் திருவரங்கத்தில் இசையுடன் திவ்யப்ரபந்தத்தை சேவிக்கும் அரையர் சேவையாகவும், ஏனைய திருமால் திருத்தலங்களில் சிறந்த அத்யாபாகர்களைக் கொண்டு நாலாயிர திவ்ய பிரபந்த சேவையாகவும் மிகச் சிறப்பாக இன்றும் நடைபெற்று வருகிறது.
முன்னொரு காலத்தில் அசுரர்கள் தேவாதிதேவர்களை மிகவும் துன்புறுத்தியதன் விளைவாக சொல்லொணா துயரமடைந்த தேவர்கள் திருப்பாற்கடலில் அறிதுயில் அமர்ந்த பரமனான ஸ்ரீமன் நாராயணனிடம் முறையிட்டனர். அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காத்திடவும் விரைவில் அசுரர்களை அழித்து தேவர்களை காத்திடவும் வாக்கருளினார். அதன்படி மார்கழித் திங்கள் ஏகாதசியன்று எம்பெருமான் மோஹினி ஸ்திரி அவதாரம் பூண்டு அசுரர்களை அழித்தார். ஆதலால் அன்றைய தினம் அதர்மம் அழித்து தர்மம் தழைத்த நாளானதால் வைஷ்ணவ ஏகாதசியாக (வைகுண்ட ஏகாதசி) போற்றப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது. இப்பெருவிழா மதுரை கூடலழகர் கோயிலில், 10.12.2015 முதல் 31.12.2015 முடிய திரு அத்யயனத் திருவிழா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
திருவிழா விபரம்
10.12.2015 கார்த்திகை 24ம் நாள் வியாழன் இரவு 7.00 மணிக்கு பெருமாள் தங்க கருட வாகனத்திலும், பெரியாழ்வார் யானை வாகனத்திலும், மெய்காட்டும் பொட்டலுக்கு புறப்பாடாகி, (ஜான்சிராணி பூங்கா அருகில்) திருப்பல்லாண்டு தொடக்கம். மெய்காட்டும் பொட்டலில் பரத்துவ நிர்ணயம், புராணம் வாசித்தல் மற்றும் பொற்கிழி வழங்கி, திருக்கோயில் வந்து சேர்தல்.
பகல்பத்து உற்சவம் 1ஆம் திருநாள் கார்த்திகை 25 (11.12.2015) வெள்ளி
காலை: 9.00 மணி- பெருமாள் புறப்பாடு, பெரியாழ்வார் திருமொழி முதற்பத்து, இரண்டாம்பத்து, சேவை
திருவாராதனம்- சாற்றுமுறை- கோஷ்டி
பகல்பத்து உற்சவம் 2ஆம் திருநாள் கார்த்திகை 26 (12.12.2015) சனி
காலை: 9.00 மணி- பெருமாள் புறப்பாடு, பெரியாழ்வார் திருமொழி மூன்றாம் பத்து, நான்காம் பத்து, ஐந்தாம் பத்து சேவை
திருவாராதனம்- பெரியாழ்வார் திருமொழி சாற்றுமுறை- கோஷ்டி
பகல்பத்து உற்சவம் 3ஆம் திருநாள் கார்த்திகை 27 (13.12.2015) ஞாயிறு
காலை: 9.00 மணி- பெருமாள் புறப்பாடு, திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழித் தொடக்கம்
திருவாராதனம்- நாச்சியார் திருமொழி சாற்றுமுறை- கோஷ்டி
பகல்பத்து உற்சவம் 4ஆம் திருநாள் கார்த்திகை 28 (14.12.2015) திங்கள்
காலை: 9.00 மணி- பெருமாள் புறப்பாடு, திருமொழித் தொடக்கம்
திருவாராதனம்- பெருமாள் திருமொழி சாற்றுமுறை- கோஷ்டி
பகல்பத்து உற்சவம் 5ஆம் திருநாள் கார்த்திகை 29 (15.12.2015) செவ்வாய்
காலை: 9.00 மணி- பெருமாள் புறப்பாடு, திருச்சந்த விருத்தம், திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, அமலனாதிபிரான் சேவை தொடக்கம்
திருவாராதனம்- அமலனாதிபிரான் சாற்றுமுறை- கோஷ்டி
பகல்பத்து உற்சவம் 6ஆம் திருநாள் கார்த்திகை 30 (16.12.2015) புதன்
காலை: 9.00 மணி- பெருமாள் புறப்பாடு, பெரிய திருமொழி முதல்பத்து, இரண்டாம்பத்து சேவை தொடக்கம்
திருவாராதனம்- சாற்றுமுறை- கோஷ்டி
பகல்பத்து உற்சவம் 7ஆம் திருநாள் மார்கழி 1 (17.12.2015) வியாழன்
காலை: 9.00 மணி- பெருமாள் புறப்பாடு, பெரிய திருமொழி மூன்றாம்பத்து, நான்காம்பத்து சேவை தொடச்சி
திருவாராதனம்- சாற்றுமுறை- கோஷ்டி பகல்பத்து உற்சவம் 8ஆம் திருநாள் மார்கழி 2 (18.12.2015) வெள்ளி
காலை: 9.00 மணி- பெருமாள் புறப்பாடு, பெரிய திருமொழி ஐந்தாம்பத்து, ஆறாம்பத்து, ஏழாம்பத்து சேவை தொடச்சி
திருவாராதனம்- சாற்றுமுறை- கோஷ்டி
பகல்பத்து உற்சவம் 9ஆம் திருநாள் மார்கழி 3 (19.12.2015) சனி
காலை: 9.00 மணி- பெருமாள் புறப்பாடு, பெரிய திருமொழி எட்டாம்பத்து, ஒன்பதாம்பத்து, சேவை தொடச்சி
திருவாராதனம்- சாற்றுமுறை- கோஷ்டி
பகல்பத்து உற்சவம் 10ஆம் திருநாள் மார்கழி 4 (20.12.2015) ஞாயிறு
காலை: 9.00 மணி- மோகினி அவதாரம், பெரிய திருமொழி பத்தாம்பத்து, பதினோறாம்பத்து திருக்குறுந்தாண்டகம் சேவை, ஆடிவீதிகள் புறப்பாடு முடிவுற்றதும் திருமங்கையாழ்வார் திருவடி தொழுதல்.
திருவாராதனம்- சாற்றுமுறை- கோஷ்டி
இராப்பத்து உற்சவம் 1ஆம் திருநாள் மார்கழி 5 (21.12.2015) திங்கள்
காலை: 3.00 மணி- நடைதிறப்பு
காலை: 3.30 மணி- விஸ்வரூபம் வைகுண்டநாதர் திருக்கோலம்
மதியம்: 2.30 மணி- அலங்கார திருமஞ்சனம்
இரவு: 7.15 மணி- பரமபதவாசல் திறப்பு
இரவு: 7.30 மணி- நம்மாழ்வார் மங்களாசாசனம்
இரவு: 8.00 மணி- திருவாராதனம்
இராப்பத்து உற்சவம் 2ஆம் திருநாள் மார்கழி 6 (22.12.2015) செவ்வாய்
மாலை: 6.00 மணி- பெருமாள் புறப்பாடு, பரமபதவாசல் திறப்பு, திருவாய்மொழி இரண்டாம்பத்து தொடக்கம்
திருவாராதனம்- சாற்றுமுறை- கோஷ்டி
இராப்பத்து உற்சவம் 3ஆம் திருநாள் மார்கழி 7 (23.12.2015) புதன்
இரவு: 7.00 மணி- பெருமாள் புறப்பாடு, பரமபதவாசல் திறப்பு, திருவாய்மொழி மூன்றாம்பத்து தொடக்கம்
திருவாராதனம்- சாற்றுமுறை- கோஷ்டி
இராப்பத்து உற்சவம் 4ஆம் திருநாள் மார்கழி 8(24.12.2015) வியாழன்
இரவு: 7.00 மணி- பெருமாள் புறப்பாடு, பரமபதவாசல் திறப்பு, திருவாய்மொழி நான்காம்பத்து தொடக்கம்
திருவாராதனம்- சாற்றுமுறை- கோஷ்டி
இராப்பத்து உற்சவம் 5ஆம் திருநாள் மார்கழி 9(25.12.2015) வெள்ளி
இரவு: 7.00 மணி- பெருமாள் புறப்பாடு, பரமபதவாசல் திறப்பு, திருவாய்மொழி ஐந்தாம்பத்து தொடக்கம்
திருவாராதனம்- சாற்றுமுறை- கோஷ்டி
இராப்பத்து உற்சவம்6ஆம் திருநாள் மார்கழி 10(26.12.2015) சனி
இரவு: 7.00 மணி- பெருமாள் புறப்பாடு, பரமபதவாசல் திறப்பு, திருவாய்மொழி ஆறாம்பத்து தொடக்கம்
திருவாராதனம்- சாற்றுமுறை- கோஷ்டி
இராப்பத்து உற்சவம் 7ஆம் திருநாள் மார்கழி 11(27.12.2015) ஞாயிறு
இரவு: 7.00 மணி- பெருமாள் புறப்பாடு, பரமபதவாசல் திறப்பு, திருவாய்மொழி ஏழாம்பத்து தொடக்கம்
திருவாராதனம்- சாற்றுமுறை- கோஷ்டி
இராப்பத்து உற்சவம் 8ஆம் திருநாள் மார்கழி 12(28.12.2015) திங்கள்
மாலை: 5.00 மணி- பெருமாள் புறப்பாடு, பரமபதவாசல் திறப்பு, திருவாய்மொழி எட்டாம்பத்து தொடக்கம்
திருவாராதனம்- சாற்றுமுறை- கோஷ்டி
இரவு: 7.00 மணி குதிரை வாகனத்தில் எழுந்தருளல் மெய்காட்டும் பொட்டலில் திருவேடர்பறி உற்சவம் முடிந்து திருக்கோயில் வந்து சேர்தல்
இராப்பத்து உற்சவம் 9ஆம் திருநாள் மார்கழி 13(29.12.2015) செவ்வாய்
இரவு: 7.00 மணி- பெருமாள் புறப்பாடு, பரமபதவாசல் திறப்பு, திருவாய்மொழி ஒன்பதாம்பத்து தொடக்கம்
திருவாராதனம்- சாற்றுமுறை- கோஷ்டி
இராப்பத்து உற்சவம் 10ஆம் திருநாள் மார்கழி 14 (30.12.2015) புதன்
இரவு: 7.00 மணி- பெருமாள் புறப்பாடு, பரமபதவாசல் திறப்பு, திருவாய்மொழி பத்தாம்பத்து தொடக்கம் பெருமாள் ஆஸ்தானம் சேர்தல்- நம்மாழ்வார் திருவடி தொழுதல்
திருவாராதனம்- சாற்றுமுறை- கோஷ்டி
இராப்பத்து உற்சவம் 11ஆம் திருநாள் மார்கழி 15 (31.12.2015) வியாழன்
மாலை: 3.00 மணி முதல் இயற்பா சாற்றுமுறை
திருவாராதனம்- சாற்றுமுறை- கோஷ்டி
21.12.2015 திங்கள்-ஸ்ரீவைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பு கலை நிகழ்ச்சிகள்
மாலை: 6.00 மணி முதல் 8.00 மணி வரை
மதுரை, திருமதி. உஷாநந்தினி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி
இரவு: 8.00 மணி முதல் 10.00 மணி வரை எழுத்தாளர், நாவலாசிரியர், திரு. இந்திராசௌந்தரராஜன் அவர்களின் ஆழ்வார்களை ஆராதிப்போம் என்ற தலைப்பில் சொற்பொழிவு
இரவு: 10.00 மணி முதல் 11.30 மணிவரை
இராஜபாளையம், திருமதி. சரளாகோவிந்தராஜன் மற்றும் திருமதி. பத்மா குழுவினரின் நாமசங்கீர்த்தனம், கோலாட்ட நிகழ்ச்சி.
தொடர்புக்கு: உதவி ஆணையர்/ செயல் அலுவலர்
அருள்மிகு கூடலழகர் திருக்கோயில், மதுரை- 625 001. தொலைபேசி: 0452- 2338542