மழை பாதிப்பு : திருப்பதி லட்டுகள் சேதம்!
ADDED :3588 days ago
திருப்பதி : தமிழகம் மற்றும் ஆந்திராவின் பலபகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக, திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வரும் லட்டுகள் சேதமடைந்துள்ளன. கோவில் சார்பில், பக்தர்களுக்கு தினமும் 3 லட்சம் லட்டுக்கள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மழையின்காரணமாக, கோவிலில் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது.