மனதில் எப்போதும் கடவுளின் திருவடியை நினைக்க வழி!
ADDED :3794 days ago
இதுபற்றி ஆதிசங்கரர் சவுந்தர்ய லகரியில் ஒரு அருமையான ஸ்லோகத்தின் மூலம் கூறுகிறார்.அன்றாடம் நாம் செய்யும் எல்லா செயல்களுமே இறைவனுக்கு செய்யப்படும் வழிபாடுகளாக ஆகட்டும் என்பது அந்த ஸ்லோகத்தின் கருத்து. பேசுவது ஜபமாகவும், கைகளால் செய்பவை எல்லாம் முத்திரைகளாகவும், கால்களால் நடப்பது எல்லாம் ஆலயத்தை வலம் வருதலாகவும், சாப்பிடுவது எல்லாம் வேள்வியில் இடப்படும் ஆகுதியாகவும், படுத்து உறங்குவது எல்லாம் நமஸ்காரமாகவும், இப்படி நாம் அனுபவிக்கும் சுகங்கள் எல்லாவற்றையுமே இறைவன் தமது பூஜைகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார். இந்த எண்ணம் முழுமையாக மனதில் பதிவதே எப்பொழுதும் கடவுளின் திருவடிகளை நினைக்கச் செய்யும். நாம் செய்வது எல்லாமே கடவுளுக்காக எனும்போது, உடலாலும், மனதாலும் எந்தத்தவறும் செய்யாத துõய்மையான வாழ்க்கையும் அமையும்.