உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் நடப்பு சீசனுக்கு பின்னர் பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கும் தடை!

சபரிமலையில் நடப்பு சீசனுக்கு பின்னர் பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கும் தடை!

சபரிமலை: நடப்பு சீசனுக்கு பின்னர் சபரிமலையில் பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கும் தடை விதிக்கப்படும் என்று கேரள ஐகோர் கூறியுள்ளது. சபரிமலை வனப்பகுதியில் இறந்த ஒரு யானையில் வயிற்றில் பாலிதீன் கழிவுகள் இருந்ததை தொடர்ந்து கேரள ஐகோர்ட், தேவசம்போர்டு, அரசு, பத்தணந்திட்டை மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றிடம் அறிக்கை கோரியது. ஐகோர்ட் நியமித்துள்ள ஸ்பெஷல் கமிஷனரும் இது பற்றி அறிக்கை தாக்கல் செய்தார். இது தொடர்பாக சபரிமலை விவகாரங்களை கவனிக்கும் டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், அனுசிவராமன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: சபரிமலையில் பிளாஸ்டிக் தடை மேலும் கடுமையாக்கப்பட வேண்டும். சன்னிதானம், பம்பை, நிலக்கல், எருமேலி மற்றும் காட்டுப்பாதைகளில் பாலிதீன் பைகள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை பொறுத்தவரை இந்த சீசன் முடிந்த பின்னர் தடை செய்யப்படும். சீசன் முடிந்ததும் மாதபூஜைகளின் போது இது நடைமுறைக்கு வரும். பிளாஸ்டிக் மூலம் சுற்றுச்சூழல் கடுமையாக மாசுப்படுகிறது. காட்டு விலங்குகள் இதற்கு பலியாகிறது. எனவே தடை உத்தரவை செயல்படுத்துவதில் அரசு தீவிரம் காட்ட வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !