பூதகுடி சதுரகிரியில் அன்னதானம்
ADDED :5196 days ago
நத்தம் : நத்தம் பூதகுடி சதுரகிரி மலையில் பழமை வாய்ந்த மலையாண்டிசுவாமி கோயிலில் ஆடி மாத அன்னதானம், குழந்தை வரம் வேண்டும் விழா நடந்தது. இங்கு முருகன் வேல் உருவில் காட்சியளிக்கிறார். குழந்தை பேறு இல்லாதவர், நோயாளிகள், குடும்ப பிரச்னை போன்றவற்றிக்கு நேர்த்தி செலுத்தினால், நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். வேண்டுதல் நிறைவேறியதும் வேல் வைத்தும், அன்னதானம் செய்தும் வழிபடுவர். குழந்தை வரம் வேண்டுவோர், அன்னாபிஷேகத்தை மடியேந்தி யாசகம் பெறுவர். இந்நேர்த்திக்கடன் விழா ஆடி மாத மூன்றாம் திங்கள் கிழமை நடக்கும். இந்த ஆண்டு விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். ஊர் பிரமுகர்கள் பனையன், செல்லையா ஏற்பாடுகளை செய்தனர்.