உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் உழவாரப்பணி
ADDED :3583 days ago
கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி தாயார் கோயிலில் சிவனடியார்கள் திருக்குழுக்கூட்டம் சார்பில் உழவாரப்பணி நடந்தது. தூத்துக்குடி, கோவில்பட்டி, எட்டையபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சிவனடியார்கள் பங்கேற்று கோயிலின் உள், வெளி பிரகாரம், சன்னதிகள், கிரிவல பாதை களில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு 10 நாட்களுக்கு முன்பாக இவ்வாறான உழவாரப்பணிகள் ஆண்டுதோறும் நடக்கிறது.