உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா

சென்னை பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா

சென்னை: பார்த்தசாரதி கோவிலில், வைகுண்ட ஏகாதசிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், வரும், 21ம் தேதி, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பரமபத வாசல் திறப்பு நடைபெற உள்ளது. இதுகுறித்து, கோவில் இணை ஆணையர் கோதண்டராமன் கூறியதாவது:  பரமபத வாசல் என்னும் சொர்க்க வாசல் திறப்பு, வரும், 21ம் தேதி, அதிகாலை, 4:30 மணிக்கு நடைபெற உள்ளது. பக்தர்கள் அதிகளவில் வருவர் என்பதால், தீவிர கண்காணிப்பு இருக்கும். கோவிலுக்கு வெளியே, இரு இடங்களில், ‘எல்.இ.டி., டிவி’க்கள் வைக்கப்பட்டு, விழா, நேரடியாக ஒளிபரப்பப்படும். பக்தர்களின் வசதிக்காக, சிறப்பு பேருந்து மற்றும் ரயில் வசதிகள், சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !