உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கார்த்திகை நிறைவு: மார்கழி பிறப்பு

கார்த்திகை நிறைவு: மார்கழி பிறப்பு

சபரிமலை: சரண கோஷங்களுக்கு தொடக்கம் குறித்த கார்த்திகை மாதம் நேற்று நிறைவு பெற்றது. இன்று மார்கழி பிறக்கிறது.கடந்த நவ.17-ல் கார்த்திகை பிறந்தது. அன்று சபரிமலையில் மண்டல காலம் தொடங்கியது. பக்தர்கள் மாலை அணிந்து விரதம் ஆரம்பித்தனர். எங்கும் ஐயப்பன் பாடல்களும், சரணகோஷங்களும் ஒலிக்க தொடங்கியது. 30 நாட்கள் கடந்த நிலையில் கார்த்திகை நேற்று நிறைவு பெற்றது. தமிழகத்தில் ஏற்பட்ட பெருமழை சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை பாதித்தது. கடந்த 30 நாட்களிலும் அலை மோதிய கூட்டம் இல்லாமல் சராசரியான கூட்டம் இருந்ததால் பக்தர்களுக்கு நல்ல தரிசனம் கிடைத்தது. 30 நாட்களில் 25 நாட்களும் மழை பெய்தது. இன்று மார்கழி பிறக்கிறது. கார்த்திகையை விட மார்கழியில் குளிர் அதிகமாக இருக்கும். இதன் அறிகுறியாக நேற்று மழை பெய்ய வில்லை. மண்டலபூஜைக்கு இன்னும் 11 நாட்கள் உள்ளது. மார்கழி பிறப்பான இன்று அதிகாலை தரிசனத்துக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !