சங்கராபுரம் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
ADDED :3640 days ago
சங்கராபுரம்: சங்கராபுரம் பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சங்கராபுரம் பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சங்கராபுரம் ஆற்று பாதை தெருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெருமாள் கோவிலில், அதிகாலை பெருமாள், தாயார் மற்றும் விநாயகர், லஷ்மிநரசிம்மர், கிருஷ்ணன் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. சங்கராபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் முனியப்ப செட்டியார் செய்திருந்தார்.