தொட்டிக்கலை சிதம்பரேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா அபிஷேகம்!
ADDED :3604 days ago
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த தொட்டிக்கலை சிதம்பரேஸ்வர் கோவிலில் ஆருத்ரா அபிஷேகம் நடந்தது. திருவள்ளூர் அடுத்த தொட்டிக்கலை கிராமத்தில் சிவகாம சுந்தரி உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில், ஆருத்ரா அபிஷேகம் நேற்று முன்தினம் இரவு, கலச பூஜையுடன் துவங்கியது. மஞ்சள், சந்தனம், நெல்லி பொடி, பல்வேறு பழங்கள் உள்ளிட்ட அபிஷேகங்கள் இரவு முழுவதும் நடந்தன. பின், காலை, சிதம்பரேஸ்வரர் மற்றும் சிவகாம சுந்தரி ஆகியோர் திருவீதி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.