மதுரைவீரன் கோவில் விழா
ADDED :5215 days ago
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் மதுரைவீரன் கோவில் திருவிழாவில் கும்ப பாளையம் கொட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.திருக்கோவிலூர் மந்தக்கரை வீதி மதுரைவீரன் கோவில் ஆண்டு திருவிழா கடந்த 29ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 31ம் தேதி சக்தி கரகம் அழைத்து, கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் காலை மதுரை வீரனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட மதுரை வீரன் வீதியுலா நடந்தது. நேற்று இரவு கும்ப பாளையம் கொட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.