உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதமலை கோவில் உண்டியல் எண்ணும் பணி

மருதமலை கோவில் உண்டியல் எண்ணும் பணி

கோவை: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், பாரதியார் பல்கலை மாணவர்கள் நேற்று ஈடுபட்டனர். பாரதியார் பல்கலையின் நாட்டு நலப்பணித்திட்ட வளாக அமைப்பு அலகு -2ன் உடற்கல்வித்துறையை சேர்ந்த, 80 மாணவர்கள் இதில் பங்கேற்று காணிக்கைகளை எண்ணி முடித்தனர். பல்கலையின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு) ராதாகிருஷ்ணன், இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !