உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுகாசன பெருமாள் கோவிலில் தைப்பூச பிரம்மோற்சவம் துவக்கம்

சுகாசன பெருமாள் கோவிலில் தைப்பூச பிரம்மோற்சவம் துவக்கம்

திட்டக்குடி: திட்டக்குடி வேதாந்தவல்லி சமேத சுகாசன பெருமாள் கோவிலில் 12ம் ஆண்டு தைப்பூச பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி காலை 7:30 மணி முதல் பூமிதேவி, ஸ்ரீதேவி, வேதாந்தவல்லி சமேத சுகாசன பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அனுக்ஞை, மிருத்சங்கிரஹ‌னம், அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. ஸ்ரீதர் பட்டாச்சாரியார் தலைமையில், திருப்பதி கணேஷ் பட்டாச்சாரியார் மற்றும் வேதவிற்பன்னர்கள் பூஜைகளை செய்தனர்.  காலை 8:30 மணிக்கு கொடியேற்றத்துடன் தைப்பூச பிரம்மோற்சவ விழா துவங்கியது. வைத்தியநாத சுவாமி கோவில் வகையறாவினர், முக்கிய பிரமுகர்கள், சுகாசன பெருமாள் சேவா சங்கத்தினர் மற்றும் பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !