உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இப்படியும் ஒரு பக்தர்!

இப்படியும் ஒரு பக்தர்!

பொன்னை விரும்பும் பூமியிலே.... என்னை விரும்பும் ஓருயிரே என்று ஒரு பாடல் உண்டு. அந்த பாடலின் கருத்தை கடுவெயின் இளநாகனார் என்னும் புலவர் அந்தக்காலத்திலேயே வெளிப்படுத்தி இருக்கிறார். முருகனிடம் அவர் கேட்கும் வரத்தைப் பாருங்கள். முருகா! நாங்கள் உன்னிடம் பொன்னையோ பொருளையோ சுகத்தையோ கேட்கவில்லை. உன் மீது என்றும் மாறாத அன்பையும், அருளையும் வேண்டுகிறோம். கடம்ப மலர் மாலை சூடியிருப்பவனே! எப்போதும் உன் திருவடியை வணங்கும் பாக்கியம் தர வேண்டும் என்கிறார். அன்பு செலுத்தும் அனைவருக்கும் தன்னையே கொடுத்தருளும் வள்ளலாக முருகப்பெருமான் விளங்குகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !