குறவர் பூஜை முறை!
முருகப்பெருமானை குறவர்கள் தங்கள் குலதெய்வமாகக் கொண்டுள்ளனர். காரணம், அவர் தங்கள் இனத்து பெண்ணான வள்ளியை ஆட் கொண்டவர், திருமணம் செய்தவர் என்று நம்புகிறார்கள். ஒரு காலத்தில் இவர்களின் பூஜை முறை வித்தியாசமானதாக இருந்தது. இவர்களுக்கு ஆகமமுறை பற்றி தெரியாது. அன்பு முறையே தெரியும். தாங்கள் பூஜை செய்யும் நகரில் ஆங்காங்கே சேவல் கொடிகளைக் கட்டுவார்கள். ஒரு ஓலைக்கொட்டகை அமைத்து, பச்சை மஞ்சளையும், சந்தனத்தையும் அரைத்து தரையில் மெழுகுவார்கள். அந்த இடத்தில் முருகனின் உருவத்தை வைப்பார்கள். உக்கிர தெய்வங்கள் பூஜை செய்யும் இடத்திற்குள் நுழையாமல் இருக்க, பூஜை செய்யும் இடத்தின் பின்பக்கம் ரத்தம் கலந்த அரிசியையும், பொரியையும் தூவுவார்கள். இதற்கு பலி பூஜை என்று பெயர். அரளி மற்றும் நறுமண மலர்களால் ஆன மாலைகளைத் தொங்க விடுவார்கள். இரட்டை ஆடை உடுத்திக் கொண்டு தூப தீபம் காட்டுவார்கள். ரத்தம் கலந்த தினையை முருகன் முன் பரப்புவார்கள். துடிகொட்டி என்ற மணியை அடித்து முருகா! நீ வந்து எங்கள் பூஜையை ஏற்க வேண்டும் என்று வேண்டுவார்கள். குறிஞ்சிப் பாடல்களைப் பாடுவார்கள். குறிஞ்சிக்கலி என்னும் நுõல் இந்த தகவலை வெளிப்படுத்துகிறது.