உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகனின் பெயர் பிள்ளையார்!

முருகனின் பெயர் பிள்ளையார்!

பிள்ளையார் என்றால் கணபதி அல்லவா...முருகனுக்கு எப்படி பிள்ளையார் என்ற பெயர் வந்தது என்ற கேள்வி எழுகிறது இந்த தலைப்பை படித்தால்! சங்க நுõல்களில் முருகனை பிள்ளையார் என்று குறிப்பிட்டுள்ளனர். சங்க நுõல்களின் உரையாசிரியரான நச்சினியார்க்கினியர் முருகனின் பெயர்களைப் பற்றி குறிப்பிடும் போது, சித்தன், சேய், சேயோன், வேள், வேலன், அரன் மகன் (சிவன் மகன்), அறுமீன் காதலன் (கார்த்திகை மாதர்கள் ஆறு பேரிடம் வளர்ந்தவன்) ஆறுமுகன், கோழிக்கொடியோன் என்றெல்லாம் குறிப்பிட்டு விட்டு, பிள்ளையார் என்ற பெயரும் முருகனுக்கே இருந்ததுஎன்கிறார். சிவபெருமானுக்கு பிள்ளையாய் இருப்பதால் இந்த பெயர் வந்திருக்கும் என அவர் கூறுகிறார். மரியாதை கருதி தந்தையை தந்தையார் என்றும், தாயை தாயார் என்றும் யார் என்ற அடைமொழி சேர்த்து அழைப்பது போல பிள்ளையுடன் யார் சேர்த்து பிள்ளையார் என்று மரியாதையாக அழைத்துள்ளனர். இப்போது பிள்ளையார் என்ற சொல்  கணபதிக்கு நிரந்தரமாகி விட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !