உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் முருகன் என்றால் சும்மாவா!

திருப்பரங்குன்றம் முருகன் என்றால் சும்மாவா!

திருப்பரங்குன்றம் முருகன் மிகவும் சக்தி வாய்ந்தவர். மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட கோவிலில் குடிகொண்டுள்ள இவர் மீது அக்கால மக்கள் மிகுந்த பயம் கொண்டிருந்தனர். தவறு செய்தால் தண்டிப்பதில் இவர் நம்பர்ஒன். ஆனால், ஏதோ தெரியாமல் தவறு செய்து விட்டார்...அவரை மன்னித்து அருளுங்கள்... என தவறு செய்தவருக்காக அவரது குடும்ப உறுப்பினர் வேண்டிக் கொண்டாலும் மன்னிக்கும் கருணை மனம் கொண்டவர். ஒரு சமயம் இந்த மலைப்பகுதியில் வசித்த திருமணமான இளைஞன், இன்னொரு பெண்ணிடம் தொடர்பு கொண்டான். இந்த விஷயம் மனைவிக்கு தெரிய வர அவன் மீது கோபம் கொண்டாள். உடனே அவன், நானா...எனக்கு அப்படி யாரிடமும்  பழக்கம் இல்லையே...திருப்பரங்குன்றத்தின் மீது ஆணை...வேலின் மேல் ஆணை...மயில் மேல் ஆணை...என்று பொய் சத்தியம் செய்து விட்டான். ஆனால், உண்மையில் தன் கணவன் வேறொருத்தியிடம் தொடர்பு கொண்டுள்ளதை ஊர்ஜிதம் செய்திருந்த மனைவி, தன் கணவன் முருகன் மீது பொய் சத்தியம் செய்து விட்டானே! அவனுக்கு ஏதாவது ஆகி விடுமோ என பயந்து, முருகா! அவரை மன்னித்து விடு. அவர் செய்த பொய் சத்தியத்திற்கு பரிகாரமாக உனக்கு பூஜை செய்கிறேன், என்று நேர்ந்து கொண்டு நேர்த்திக்கடனையும் நிறைவேற்றினாள். திருப்பரங்குன்றம் முருகன் மீது அந்தளவுக்கு மக்களுக்கு அச்சம் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !