தைப்பூச திருநாளில் தமிழெடுத்து பாடுவோம்!
தைப்பூசத்தன்று முருகனை வணங்குவதற்கு உரிய பாடல்கள் தரப்பட்டுள்ளன.
அருணகிரியாரின்பாடல்கள்
மாலோன் மருகனை மன்றாடி
மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞான
தெய்வத்தை மேதினியில்
சேலார் வயல்பொழில்
செங்கோடனை சென்று கண்டு தொழ
நாலாயிரம் கண் படைத்திலனே
அந்த நான்முகனே.
ஆலுக் கணிகலம் வெண்டலை
மாலை அகிலம் உண்ட
மாலுக் கணிகலம் தண்ணந்
துழாய்மயில் ஏறும் ஐயன்
காலுக் கணிகலம் வானோர்
முடியும் கடம்பும் கையில்
வேலுக் கணிகலம் வேலையும்
சூரனும் மேருவுமே.
ஆறிரு தடந்தோள் வாழ்க
அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க
குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க
யானைதன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க
வாழ்க சீர் அடியார் எல்லாம்.
விழிக்குத் துணை திருமென்மலர்
பாதங்கள் மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும்
நாமங்கள்; முன்பு செய்த
பழிக்குத்துணை அவன் பன்னிரு
தோளும் ; பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும்
öங்கோடன் மயூரமுமே.
மாலோன் முருகனை மன்றாடி
மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞான
தெய்வத்தை மேதினியில்
சேலார் வயல்பொழில் செங்கோடனைச்
சென்று கண்டு தொழ
நாலாயிரம் கண் படைத்திலனே
அந்த நான்முகனே!
செந்தூர் முருகன் புகழ்பாடல்!
வந்த வினையும் வருகின்ற வல்வினையும்
கந்தனென்று சொல்லக் கலங்கிடுமே
செந்தில்நகர் சேவகா என்று
திருநீறு அணிவார்க்கு மேவ வராதே வினை.
கச்சியப்ப சிவாச்சாரியார் பாடல்!
துய்யதோர் மறைகளாலும்
துதித்திடற் கரிய செவ்வேள்
செய்ய பேரடிகள் வாழ்க
சேவலும் மயிலும் வாழ்க
வெய்யசூர் மார்பு கீண்ட
வேற்படை வாழ்க அன்னாள்
பொய்யில் சீர் அடியார் வாழ்க
வாழ்க இப் புவனமெல்லாம்.