உங்களால் முடிந்ததை பிறருக்கு கொடுங்கள்!
நபிகள் நாயகம் மெதீனா நகர மக்கள் மத்தியில், அன்புக்குரிய மக்களே! ஒரு மனிதன் தன் உடலை விட்டதும், இறைவன் முன்னால் நிற்க வேண்டி வரும். அப்போது இறைவன் அவரைப் பார்த்து, நான் நோயுற்றிருந்தபோது என்னை ஏன் பார்க்க வரவில்லை? பசியால் உம்மிடம் உணவு கேட்டேன். ஏன் தரவில்லை? தாகம் தாளாமல் தண்ணீர் கேட்டேன். ஏன் தரவில்லை? என்று கேட்பான். அதற்கு நீங்கள் என்னபதில் தயார் செய்துவைத்திருக்கிறீர்கள்? என்றார். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்துஇடைமறித்தார்.நாயகமே! இறைவன் என்னிடம் அப்படி கேட்டால் உலகங்களுக்கெல்லாம் தலைவனான உன்னை பசியோ, நோயோ தாக்கமுடியாதே என்பேன். நோயோ, பசியோ உம்மை வாட்டினால், உன்னால்எங்களை எப்படிபார்க்க முடியும்? அப்படியிருக்க, என் மீது நீ குறை காண்பது நியாயமா? என கேட்பேன், என்றார். அதற்கு நாயகம்.தோழரே! நீர் அப்படி கேட்டால், இறைவன் உம்மிடம், ஒரு குறிப்பிட்ட மனிதரின் பெயரைச் சொல்லி, அவருக்கு ஏன் தண்ணீர் தரவில்லை? ஏன் உணவு தரவில்லை? ஏன் நோயுற்ற போது அவருக்கு ஆறுதல் சொல்லவில்லை? என கேட்பானே. அப்படி செய்திருந்தால், அவர்களின் வடிவில் என்னைப் பார்த்திருப்பீரே என கேட்பான். அதற்கு என்ன பதில் சொல்வீர்? என்றதும், அந்த மனிதர் பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்தார். தொடர்ந்து பேசிய அண்ணலார், உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாகக் கருதி, அவர்களுக்கு உதவி செய்யுங்கள். ஏழைகளுக்கு உதவினால், அது இறைவனுக்கே உதவியது போல.... என்றார். ஏழைகளுக்கு உங்கள் சக்திக்குட்பட்ட உதவிகளை அவசியம் செய்யுங்கள்.