உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் தென்பெண்ணையில்.. தீர்த்தவாரியில் சுவாமிகள் பங்கேற்பு

திருக்கோவிலூர் தென்பெண்ணையில்.. தீர்த்தவாரியில் சுவாமிகள் பங்கேற்பு

திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் நடந்த ஆற்று திருவிழாவில் கீழையூர் வீரட்டானேஸ்வரர் கலந்து கொண்டு அருள் பாலித்தனர்.திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் நேற்று நடந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கீழையூர் வீரட்டானேஸ்வரர், அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர், ஏரிக்கரை மூலை இரட்டை விநாயகர், வீரப்பாண்டி வீரட்டானேஸ்வரர் சுவாமிகள் பங்கேற்று அருள் பாலித்தனர்.முன்னதாக காலை 9:00 மணிக்கு சுவாமிகள் தாரை தப்பட்டை முழங்க ஆஸ்தானத்தில் இருந்து, ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது. ஆற்றங்கரையில் தனித்தனியாக அமைக்கப் பட்டிருந்த பந்தலில், சுவாமிகள் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சுற்றுவட்டாரத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த திருக்கோவிலூர் டி.எஸ்.பி., கீதா தலைமையில் போலீசார், பலத்த பாதுகாப்பு எற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !