உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமயபுரம் மாரியம்மன் ரதம் பாதயாத்திரை துவக்கம்

சமயபுரம் மாரியம்மன் ரதம் பாதயாத்திரை துவக்கம்

துவரங்குறிச்சி: துவரங்குறிச்சி அருகே கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கு பெறும் சமயபுரம் மாரியம்மன் ரதம் மற்றும் ஒன்பதாம் ஆண்டு பாதயாத்திரை தொடங்கியது. திருச்சி மாவட்டம் கோவில்பட்டி, வி.இடையபட்டி, லெஞ்சமேடு, அகரப்பட்டி, சோமன்பட்டி, தொட்டியபட்டி, மினிக்கியூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ஒவ்வொரு ஆண்டும், மாலை அணிந்து, காப்பு கட்டி ரதம் மற்றும் பாதயாத்திரையில் சமயபுரம் கோவிலுக்குச் சென்று வருகின்றனர். இந்தாண்டு யாத்திரை நேற்று முன்தினம் இரவு ஆறு மணியளவில் கோவில்பட்டி வீரமாகாளியம்மன் கோவிலிலிருந்து மேள, தாளம், வாணவேடிக்கையுடன் புறப்பட்டு விராலிமலை, திருச்சி, திருவானைக்கோவில் வழியாக திங்கள் கிழமை காலை 10 மணியளவில் சென்றடைகின்றனர். பின்னர் தீச்சட்டி எடுத்தல், அலகு குத்துதல், மா விளக்கு எடுத்தல், தொட்டி கட்டுதல், மொட்டை போடுதல் போன்ற காணிக்கைகளை அம்மனுக்கு செலுத்துகின்றனர். இதில், கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, 1,500 பெண்கள் உட்பட 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். பாத யாத்திரையில் பங்கு கொள்ளும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !