குன்றத்து பழநி ஆண்டவருக்கு ஜன. 24ல் தைப்பூச விழா!
ADDED :3748 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான பழநி ஆண்டவர் கோயிலில் ஜன. 24ல் தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது. மலைக்குப் போகும் பாதையில் அடிவாரத்தில் உள்ள பழநி ஆண்டவர் கோயில் மூலஸ்தானத்தில், பழநி கோயில் மூலவர் போன்று சுவாமி எழுந்தருளியுள்ளார். ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று உச்சி கால பூஜையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் முடிந்து ராஜ அலங்காரத்தில் சுவாமி அருள்பாலிப்பார். தவிர சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தன்று சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, முத்துக்குமார சுவாமி, தெய்வானை தனித் தனியாக புறப்பாடும் நடக்கிறது. இரு முருகன்கள் ஒரே நேரத்தில் வீதி உலா செல்வது தைப்பூசத்தன்று மட்டுமே.