நீலமங்கலம் கோவிலில் துர்கையம்மனுக்கு பூஜை
ADDED :3751 days ago
கள்ளக்குறிச்சி: நீலமங்கலம் துர்கையம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் தை இரண்டாவது வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடந் தது. அதிகாலை விநாயகர், சிவன், அம்மன், வள்ளி, தெய்வானை சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ராகு காலத்தில் துர்கையம்மனுக்கு, 16 வகையான அபிஷேகங்கள் செய்து வைக்கப்பட்டன. சர்வ அலங்காரத்திற்கு பின், தீப பூஜை செய்தனர். பெண்கள் அகல் விளக்கில் தீபம் ஏற்றி, சுமங்கலி தாம்பூலம் கொடுத்துக் கொண்டனர்.