உலக நன்மைக்காக 1008 விளக்கு பூஜை!
ADDED :5214 days ago
ராமேஸ்வரம் : ஆடி வெள்ளியை முன்னிட்டு உலக நன்மைக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 1008 விளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி நேற்று மாலை 6 மணிக்கு ராமநாதசுவாமி கோயில் மூன்றாம் பிரகாரத்தில் விளக்கு பூஜையை, விஸ்வ இந்து பரிஷத் அகில உலக செயல் தலைவர் வேதாந்தம் விளக்கு பூஜையை துவக்கி வைத்தார். பின் அம்பாள், லெட்சுமி, சரஸ்வதி தீபங்கள் ஏற்றப்பட்டன. ஏராளமான பெண்கள் விளக்குகளை ஏற்றி வைத்து உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்து பூஜித்தனர். தொடர்ந்து ராமநாதசுவாமி,பர்வதவர்த்தினி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. ராமகிருஷ்ணமடம் நிர்வாகி சுவாமி சுத்தானந்த மகராஜ், பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் முரளீதரன், ராமர் பாலம் பாதுகாப்பு கமிட்டி நிர்வாகி தில்லைபாக்கியம், ஏகல் வித்யாலயா மதுசூதனன் உட்பட பலர் பங்கேற்றனர்.