உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தியாகராஜ சுவாமி ஆராதனை விழாவில் விநாயகம் குழுவினரின் இசைக் கச்சேரி

தியாகராஜ சுவாமி ஆராதனை விழாவில் விநாயகம் குழுவினரின் இசைக் கச்சேரி

புதுச்சேரி: திருவையாறில் நடந்த தியாகராஜ சுவாமிகள் ஆராதனை விழாவில், புதுச்சேரி விநாயகம் குழுவினரின் நாதஸ்வர, தவில் இசைக் கச்சேரி நடந்தது. திருவையாறில் நடைபெற்று வரும் சத்குரு தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழாவில், ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரி விநாயகம் குழுவினரின் சிறப்பு நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டு திருவையாறில் நடந்த 169வது ஆராதனை விழாவில், புதுச்சேரி விநாயகம் குழுவினரின் நாதஸ்வர, தவில் இசைக் கச்சேரி நடந்தது. பழைய சீவரம் காளிதாஸ், திருக்கோவிலுார் பாலாஜி ஆகியோரின் நாதஸ்வர இசையும், விநாயகம், சிவா ஆகியோரின் தவில் இசையும் வாசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !