காஞ்சி மகா பெரியவர் பாதுகா வந்தனம்!
ADDED :3544 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், 100 அடி ஸ்துாபி தியான மண்டபத்தில், உலக மக்கள் நன்மைக்காக, மகா பெரியவர் பாதுகா வந்தனம் நேற்று துவங்கியது. காஞ்சிபுரம், சாலை தெருவில், 100 அடி ஸ்துாபி தியான மண்டபம் உள்ளது. இதில் உலக மக்கள் நன்மைக்காக, மகா பெரியவர் பாதுகா வந்தனம் துவங்கி நடந்து வருகிறது. தினசரி, மாலை 4:30 மணி முதல், இரவு 7:30 மணி வரை, இந்த அர்ச்சனை நடைபெறுகிறது. இதில் அனைத்து ராசி நட்சத்திரத்தில் உள்ளவர்கள் கலந்து கொண்டு, உரிய கட்டணம் செலுத்தி, பிரசாதம் பெற்று செல்லலாம். இந்த அர்ச்சனை, 90 நாட்கள் நடைபெறும் என, சங்கர பக்தஜன சபா செயலர் வைத்தியநாதன் தெரிவித்து உள்ளார்.