உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள் அருள்பாலிப்பு!

சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள் அருள்பாலிப்பு!

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயணப் பெருமாள் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு, நேற்று மூலவர் பெருமாள் சிறப்பு  அலங்காரத்தில் அருள்பாலித்தார். காலை 6:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 7:30 மணிக்கு நித்தியபடி பூஜை முடிந்து, மூலவர் பெருமாள் பிருந் தாவன கண்ணன் அலங்காரத்திலும், 8:30 மணிக்கு உற்சவர் பெருமாள் திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிற்பகல் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, மாலை 6:00 மணிக்கு நித்தியபடி பூஜை, இரவு 9:00 மணிக்கு  ஏகாந்த சேவை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !