நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் பிப்., 12ல் கும்பாபிஷேகம்
ADDED :3671 days ago
கோபி: கோபி குள்ளம்பாளையம் நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்,வரும், 12ம் தேதி நடக்கிறது. இதையொட்டி இன்று காலை, 9 மணிக்கு, தீர்த்தக்குடங்கள் முளைப்பாரி எடுத்து வரப்படுகிறது. மாலை, 5 மணிக்கு யாகசாலை பிரவேசம், முதல் கால ஹோமம், வேத திவ்ய பிரபஞ்சம் சாற்று முறை தீபாராதனை நடக்கிறது. நாளை (11ம் தேதி) காலை, 9 மணிக்கு காயத்ரி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. மாலை, 4 மணிக்கு மூல விக்கிரஹங்கள் மண்டபம் எடுத்து வரப்படுகிறது. இதை தொடர்ந்து பெருமாள் சிலை, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி, ஆஞ்சநேயர், மகாலட்சுமி, துவாரபாலகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. பிப்., 12ம் தேதி காலை, 9 முதல் 10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை குள்ளம்பாளையம் மக்கள் செய்து வருகின்றனர்.