உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அற்புத குழந்தை இயேசு தேர்பவனி கோலாகலம்

அற்புத குழந்தை இயேசு தேர்பவனி கோலாகலம்

கரூர்: கரூர் அடுத்த, கிருஷ்ணராயபுரம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட லாலாபேட்டையில் திருக்குடும்ப தேவாலயத்தில், 27வது ஆண்டு விழா நடந்தது. முன்னதாக லாலாபேட்டை காஞ்சி நகரில் இருந்து அற்புத குழந்தை இயேசு தேர் பவனி நடந்தது. திருப்பலியை பெட்டவாய்த்தலை பங்கு தந்தை மரிய லூயிஸ் நடத்தி வைத்தார். இதில், ஏராளமானோர் பங்கேற்று இயேசுவின் கருணை, அன்பை பெற்றனர். தொடர்ந்து, புலியூர் குழந்தை இயேசு பங்குத்தந்தை மரிய அந்தோணிசாமி திருப்பலி நிறைவேற்றினார். திருச்சி பெரிய மிளகுபாறை புனித சந்தியாகப்பர் ஆலய பங்குத் தந்தை மைக்கேல் ஜோ, குளித்தலை பங்கு தந்தை தாமஸ் ஞானதுரை ஆகியோர் திருப்பலியில் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை திருக்குடும்ப தேவாலய நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !