சேலம் தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை
ADDED :3685 days ago
சேலம்: சாம்பல் புதனை முன்னிட்டு, நேற்று சேலம் தேவாலயங்களில் நடந்த, சிறப்பு பிரார்த்தனையில், திரளாக கிறிஸ்தவர்கள் வழிபட்டனர். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்திய, 40 நாட்களை தவக்காலமாக கிறிஸ்தவர்கள் அனுசரிப்பது வழக்கம். நடப்பாண்டு மார்ச், 27ம் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சாம்பல் புதன் தினமான நேற்று தவக்காலம் துவங்கியது.
சேலம் குழந்தை ஏசு பேராலயத்தில் நேற்று காலை, 5.30 மணி முதல், 6.30 மணி வரை நடந்த திருப்பலியில், கலந்து கொண்டர்வகளுக்கு திருநீர் பூசி ஆசி வழங்கப்பட்டது. தொடர்ந்து, காலை, 7.30 மணிக்கு இரண்டாவது திருப்பலி நடந்தது. இதில், திரளாக கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். சேலம் மாநகர், புறநகரில் உள்ள, 40 தேவாலயங்களில் நேற்று சாம்பல் புதன் திருப்பலி நடந்தது.