ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3790 days ago
ஓமலூர்: பாகல்பட்டியில், ராஜகணபதி மற்றும் குஞ்சுமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டியில், மிக பழமையான ராஜகணபதி மற்றும் குஞ்சு
மாரியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேக பணி கடந்த சில தினங்களாக நடந்து
வந்தது. கோவில் வளாகத்தில் யாக குண்டம் அமைக்கப்பட்டு, திருப்பரங்குன்றம் ராஜபட்டால்
சிவாச்சாரியார் தலைமையில், வேதமந்திரங்கள் முழங்க, நேற்று காலை, 9 மணிக்கு, ராஜகணபதி மூலஸ்தான கோபுர கலசத்துக்கும், குஞ்சுமாரியம்மன் கோவில் மூலஸ்தான கோபுர கலசத்துக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.