உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னகாமாட்சி கோவில் கும்பாபிஷேக விழா

அன்னகாமாட்சி கோவில் கும்பாபிஷேக விழா

சேந்தமங்கலம்: புதுச்சத்திரம் யூனியன், களங்காணியில் பல தலைமுறைகளுக்கு முன்னர்
அமைக்கப்பட்ட மாசி பெரியசாமி, அன்னகாமாட்சி, லாடதன்னாசி திருக்கோவில் உள்ளது.
இக்கோவிலை புனரமைத்து, புதிய ஆலயம் எழுப்புவதற்காக நீண்ட நாட்களாக, முயற்சி நடந்தது.

சில மாதங்களுக்கு முன் புதிதாக கோவில் கட்ட சுவாமி உத்தரவு கிடைத்தது. தொடர்ந்து,
இக்கோவிலை பூர்வீகமாக கொண்டவர்கள் மற்றும் பகுதிவாசிகள் வரி வசூலித்து ஆலய
திருப்பணியை துவக்கினர். இதைத்தொடர்ந்து பணிகள் நிறைவடைந்து, நேற்று அதிகாலை
கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !