கோபி பவளமலை முருகனுக்கு 20ல் சங்கு பூஜை அபிஷேகம்
ADDED :3680 days ago
கோபி: கோபி பவளமலை முருகன் கோவிலில், கும்பாபிஞஷக, 12 ஆம் ஆண்டு நிறைவு விழா,
108 சங்காபிஷேக விழா, 20ம் தேதி கோலாகலமாக நடக்கிறது. இதையொட்டி அன்று காலை, 9
மணி முதல், 11.30 வரை விநாயகர் பூஜை, கலச ஆவாஹணம், 108 சங்கு பூஜை, சத்து சம்ஹார
திரிசதை ஹோமம், திரவிய ஹோமம், பூர்ணாஹீதி, தீபாராதனை நடக்கிறது. காலை, 11.30
மணிக்கு மூலவர் அபிஷேகம், 108 சங்காபிஷேகம், 12.30 மணிக்கு மகா தீபாராதனை, பிரசாதம்
வழங்குதல் நடக்கிறது. சத்ரு சம்ஹார திரிசதை அர்ச்சனை செய்ய விரும்புவோர், பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.