உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பச்சமலை முருகன் கோவிலில் சுற்றுசுவர் விரைவில் சீரமைப்பு

பச்சமலை முருகன் கோவிலில் சுற்றுசுவர் விரைவில் சீரமைப்பு

கோபி: கோபி பச்சமலை முருகன் கோவில் சுற்றுசுவர் மறு சீரமைப்பு பணி, 4.98 லட்சம் ரூபாய்
செலவில் விரைவில் துவங்கவுள்ளது. கோபி பச்சமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது.

கோவிலின் வடக்கு பகுதி சுற்றுவர், சில ஆண்டுகளுக்கு முன் சரிந்து விழுந்தது. இதனால் மேற் பிரகார கட்டடம் வலுவிழந்தது. இந்நிலையில், கடந்த 2015 நவ., மாதத்தில் பெய்த மழையால், வடக்கு திசையில், மதிற்சுவர் இடிந்து விழுந்தது. இதுகுறித்த செய்தி, காலைக்கதிரில் வெளியானது. இது இந்து சமய அறநிலைய துறை, இணை ஆணையர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் மறு சீரமைப்பு பணிக்காக, கோவில் நிதியில் இருந்து, 4.98 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சீரமைப்புக்கு ஏலம் விடப்பட்டது. பவானி சிங்கம்பேட்டையை சேர்ந்த ஒப்பந்தாரர் ஏலம் எடுத்துள்ளார். மறுசீரமைப்பு பணி இன்னும் தொடங்கவில்லை. வேலை ஆரம்பித்தவுடன், முழு மூச்சாக நடத்தி முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !