உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவெண்ணெய் நல்லூர் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

திருவெண்ணெய் நல்லூர் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

திருவெண்ணெய் நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர், அய்யனார் கோவிலில் நடந்த பாலாய விழா வையடுத்து, கோவிலில் உயிர்கள் பலியிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

திருவெண்ணெய்நல்லூர் பிரசித்தி பெற்ற அய்யனார் கோவிலில் கடந்த 14ம் தேதி உலக நன்மை வேண்டியும், கோவிலில் ஏற்பட்ட தோஷபரிகார நிவர்த்திக்காகவும் கணபதி பூஜையுடன் சிறப்பு யாகங்கள் துவங்கின. கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரவீண்குமார் தலைமையிலான நம்பூதிரிகள், நேற்று முன் தினம் காலை 5:00 மணிக்கு சுதர்சனயாகம், திலகவன யாகம் உள்ளிட்ட பல்வேறு யாகங்கள் செய்தனர். பின், கோவிலிலுள்ள சுவாமிகளுக்கு பாலாலயம் செய்யப்பட்டு, வரும் மே 11ம் தேதி கும்பாபிஷேகம் நடத்திட திட்டமிடப்பட்டது. பிப்., 15 தேதி முதல் கும்பாபிஷேகம் நடந்து மண்டலபூஜைகளின் நிறைவு நாள் வரை கோவிலில் கால்நடைகள் பலியிடுதல் தடை செய்யப்படுவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் சந்திரசேகரன், சரவணன் மற்றும் திருப் பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !