மாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபாடு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து, பக்தர்கள் கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு செய்தனர். பொள்ளாச்சி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும், கோவிலில், தேர்த்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு, தேர்த்திருவிழா கடந்த 9ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதனைத்தொடர்ந்து, கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடந்தது. விழாவையொட்டி, கரியகாளியம்மன் கோவிலில், நேற்றுமுன்தினம் இரவு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, அங்கிருந்து கம்பம் ஊர்வலமாக தெப்பக்குளம் கொண்டு வரப்பட்டு, அங்குள்ள விநாயகர் கோவிலில் சிற ப்பு பூஜைகள் நடைபெற்றது. பின், அலங்கரிக்கப்பட்ட கம்பம் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, இரவு, 11:30 மணிக்கு கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதனையடுத்து, நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்கள், கம்பத்திற்கு புனித நீர் விட்டு, அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து, வரும் 23ம் தேதி முதல் மார்ச் 5ம் தேதி வரை இரவு, 9:00 மணிக்கு பூவோடு வைத்தல் நிகழ்ச்சியும்; 27ம் தேதி காலை, 10:30 மணிக்கு கொடியேற்றமும், மார்ச் 2ம் தேதி காலை, 6:00 மணிக்கு மாவிளக்கு, காலை, 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு, 7:00 மணிக்கு தே÷ ராட்டம் முதல்நாள் வெள்ளித்தேரில் அம்மன் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 3ம் தேதி இரவு, 7:00 மணிக்கு இரண்டாம் நாள் தே÷ ராட்டம் நிகழ்ச்சியும்; வரும் 4ம் தேதி இரவு, 7:00 மணிக்கு மூன்றாம் நாள் தேரோட்டம் நிகழ்ச்சியும் இடம்பெறுகின்றன. பின், பாரிவேட்டை, தெ ப்பத்தேர் உற்சவமும் நடக்கிறது. வரும் 5ம் தேதி காலை, 8:30 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு, 9:00 மணிக்கு கம்பம் எடுத்தல் நிகழ்ச்சி யும்; 7ம் தேதி இரவு, 8:00 மணிக்கு மகா அபிேஷகமும் நடைபெறுகிறது.