உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் கோவில் தேருக்கு முதல்வர் ரூ.1 லட்சம் நிதியுதவி

காரைக்கால் கோவில் தேருக்கு முதல்வர் ரூ.1 லட்சம் நிதியுதவி

புதுச்சேரி: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலுக்கு வெள்ளித் தேர் செய்வதற்கு, முதல்வர் ரங்கசாமி ரூ. 1 லட்சம் நிதி வழங்கினார். காரைக்காலில் புகழ்வாய்ந்த நித்ய கல்யாண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு வெள்ளித்தேர் செய்வதற்கு, காரைக்கால் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., நாஜிம் முயற்சி மேற்கொண்டார். ரூ. 5 லட்சம் செலவில், மரத்தாலான தேர் பணிகள் முடிந்துள்ளது. அடுத்து, ரூ. 35 லட்சம் செலவில், 90 கிலோ எடையில், வெள்ளி தகடுகள் பதிக்கப்பட உள்ளது.அப்பணிக்காக நிதி திரட்டப்பட்டு வருகிறது. சட்டசபையில் முதல்வர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், நாஜிம் எம்.எம்.ஏ., முன்னிலையில், முதல்வர் ரங்கசாமி, தனது சொந்த நிதி ரூ. 1 லட்சத்தை, கோவில் குருக்கள் அரங்கநாதனிடம் நேற்று வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !