ராஜபாளையம் சொக்கர் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :3686 days ago
ராஜபாளையம்: ராஜபாளையம் சொக்கர்கோயிலில் பிரம்மசோற்சவ விழாவின் ஒரு பகுதியாக பிப்.,19, காலை மீனாட்சி, சொக்கர் திருக்கல்யாணம் நடந்தது. கோயில் முன் மணமேடை அமைக்கப்பட்டு, சுவாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். காலை 11 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. கோயில் பரம்பரை அறங்காவலர் பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா, சுதர்சனம் அம்மாள் உட்பட பலர் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் அளிக்கப்பட்டது.