உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிக்கான பாலாலய பூஜை துவக்கம்

அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிக்கான பாலாலய பூஜை துவக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்லேஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேகத்துக்கான திருப்பணி பாலாலய பூஜை பிப்.,19ல் நடந்தது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் உலக பிரசித்தி பெற்றது. மாதந்தோறும்
பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கின்றனர். இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்தது. அதன்படி கடந்தாண்டு ஜனவரி 26ம்தேதி முதல் கட்டமாக, 9 கோபுரங்களுக்கும், இரண்டாம் கட்டமாக மார்ச், 12ம் தேதி, 36 சன்னதிகளுக்கும் பாலாலயம் நடத்தப்பட்டு கோவிலை சுத்தம் செய்தல், கோவில் கோபுரங்களை பழமை மாறாமல் புதுப்பித்தில் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், மூலவர் அருணாசலேஸ்வரர் சன்னதி, மூலவர் உண்ணாமுலையம்மன் சன்னதி, பெரிய நாயகர் சன்னதி உள்பட, 22 விமானங்களுக்கு மூன்றாம் கட்டமாக பாலாலய பூஜை பிப்.,19ல் நடந்தது. இதை முன்னிட்டு அண்ணாமலையார் கோவிலில், சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. தொடர்ந்து யாக சாலை பூஜை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !