உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னுார் கோபாலசாமி கோவிலில் மாசிமக சிறப்பு ஹோமம்

அன்னுார் கோபாலசாமி கோவிலில் மாசிமக சிறப்பு ஹோமம்

அன்னுார்: கதவுகரை கோபாலசாமி கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு, இன்று சிறப்பு
ஹோமம் நடக்கிறது.

கதவுகரை கோபாலசாமி கோவில், 100 ஆண்டுகள் பழமையானது.இக்கோவிலில், ஆண்டுக்கு ஆறு முறை சிறப்பு ஹோமங்கள் நடக்கிறது.இன்று மாசி மகத்தன்று, காலை, 6:30 முதல், 9:30 மணிவரை, சுதர்சன ஹோமம், காயத்ரி, தன்வந்திரி, மகாலட்சுமி, பஞ்சபூத ஹோமங்கள்
நடக்கிறது. அலங்கார, அபிஷேக பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து
வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !