முருகனை வணங்கும் குக சண்டிகேஸ்வரர்!
ADDED :3715 days ago
சிவபக்தரான சண்டிகேஸ்வரர், சிவசன்னிதி கோஷ்டத்தை (சுற்றுச்சுவர்) ஒட்டி தியானத்தில் இருப்பார். நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கடையூர் அருகிலுள்ள ஆதிகடவூர் மயானம் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் ஒரே சன்னிதிக்குள் இரண்டு சண்டிகேஸ்வரர்களை காணலாம். இக்கோவிலிலுள்ள முருகனை சிங்காரவேலர் என்பர். இத்தலத்து சண்டிகேஸ்வரர் முருகனையும் பிரார்த்திப்பதாக ஐதீகம். இவருக்கு, குக சண்டிகேஸ்வரர் என்று பெயர்.