இறைவன் அருகில் இருக்கிறானா, தூரத்தில் இருக்கிறானா?
ADDED :3910 days ago
நம்மிடம் உலக ஆசைகள் எந்த அளவுக்குக் குறைவாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு இறைவன் நமக்கு அருகில் இருக்கிறான். நம்மிடமக உலக ஆசைகள் எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு இறைவன் நமக்கு அதிக தூரத்தில் இருக்கிறான். தர்ம வழியில் வாழ்பவர்களுக்கு இறைவன் அருகில் இருக்கிறான். அதர்ம வழியில் வாழ்பவர்களுக்கு இறைவன் வெகு தொலைவில் இருக்கிறான். உண்மையான பக்தி, இறைவன் மீது நம்பிக்கை, மனத்தூய்மை இருப்பவர்களுக்கு ஆண்டவன் எளிதில் அகப்படுவான். சுயலாப நோக்கமின்றி பக்திக்காகவும், ஞானத்திற்காகவும் தன்னை வழிபடுபவர்களுக்கு இறைவன் எப்போதும் மிகவும் அருகில் இருக்கிறான்.