உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தூயபக்தி என்றால் என்ன?

தூயபக்தி என்றால் என்ன?

தெய்வ வழிபாடு - கோயில் வழிபாடு என்பது, பலருக்கும் ஆரம்பத்தில் ஏதேனும் பயன் கருதித்தான் அமைகிறது. அவ்விதம் இல்லாமல் எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல், பக்திக்காகவே பக்தி செய்வது, முக்தியையும் பொருட்படுத்தாதது தூய பக்தி எனப்படும். பகவானை எல்லோரும்தான் வணங்குகிறோம். பகவானைத் தவிர வேறு எதையும் எவரையும் வணங்காதவர்கள் பகவானை வணங்கும் பொழுது - பகவானுக்கும் பெருமை, அப்படிப்பட்ட பக்தர்களுக்கும் பெருமை, இத்தகைய தூய பக்தியே சிறந்ததும் போற்றத்தக்கதும் ஆகும். பயன் கருதாத நிஷ்காம பக்தியாகிய தூயபக்தியைக் குலமகளுடனும், பிரதிபலன் கருதிச் செய்யும் பக்தியை வேசியுடனும் வைணவச் சான்றோர் ஒருவர் ஒப்பிட்டுக் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !