மனதை அடக்குவது எப்படி?
ADDED :3910 days ago
மனதை அடக்குவது அல்லது வெற்றி கொள்வது என்பது ஒரே நாளில் கைகூடாது மீண்டும் மீண்டும், பயிற்சி செய்து பயிற்சி செய்துதான் மனதை இறைவனிடம் ஒருமுகப் படுத்துவதன் மூலம் மன அடக்கம் பெற இயலும். மனதை வெற்றிகொள்வதற்குச் சிலருக்குச் சில ஆண்டுகள் ஆகும். பலருக்குப் பல ஆண்டுகள் ஏன், பல பிறவிகள் கூட ஆகும். பயிற்சியாலும் வைராக்கியத்தாலும் மனதை அடக்க முடியும். என்று, கீதையில் கண்ணன் அருளியுள்ளார். மன அடக்கம் பேரின்ப நிலைக்கு அழைத்துச் செல்வதால், இடைவிடாமல் மன அடக்கப் பயிற்சியை நாம் மேற்கொண்டிருக்க வேண்டும். மனம் தூய்மை பெறுமளவிற்கு, மனம் உள்முகமாகத் திரும்புகிறது.