இலக்கியம் என்றால் என்ன?
ADDED :3910 days ago
இலக்கியம் என்பது, ஏதேனும் உயர்ந்த ஓர் இலக்கை (இலட்சியத்தைக்) கொண்டிருக்க வேண்டும் என்று பெரியோர் கூறுவர்.மனிதனை உயர்ந்த மனிதனாக வாழச் செய்வதே இலக்கியத்தின் நோக்கம். மக்களின் இதயத்தை மென்மைப்படுத்தி, நுண்ணிய உணர்வுகளை வளர செய்து, மக்களைப் பண்படுத்தும் நூல்களுக்கு மட்டுமே, இலக்கியம் என்ற சொல் பொருந்தும். நல்ல கவிஞர்களும் நல்ல இலக்கியகர்த்தாக்களும் சமுதாய நலனுக்காகவே தங்கள் படைப்புகளை வழங்கினார்கள். சமுதாய நலனைப் பாதிக்கும் வகையில் எழுதுபவர்களைத் தேச விரோதிகள் என்றே சொல்ல வேண்டும். அவர்கள் எழுதும் எழுத்துக்கள் இலக்கியம் என்ற சொல்லுக்குத் தகுதியானவை அல்ல.