மனிதப்பிறவியின் நோக்கம் என்ன?
ADDED :3910 days ago
எல்லா உயிர்களும் இறைவனை நோக்கிப் பயணம் செய்துகொண்டிருக்கின்றன. இந்த உயிர்களில் - இந்தப் பயணத்தில் - மனிதன் முன்னணியில் இருக்கிறான். ஆத்மா தன்னை உணர்வதும் ஆத்மஞானம் பெறுவதும்தான் மனிதப்பிறவியின் நோக்கம் இதையே வாழ்க்கையின் பயன் கடவுள் என்ற குறிக்கோளாகும் என்றும் குறிப்பிடலாம். அருள் வாழ்க்கையின் ஒப்பற்ற சிறப்பை மேன்மையை நாம் முழுமையாக அடைவதற்கு உரிய பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதை, இறைவனின் துணையை உதவியைப் பெற்றுத்தான் சாதிக்க இயலும்.