ஒப்பரவு என்றால் என்ன?
ADDED :3910 days ago
ஒப்பரவு என்பதற்குச் சமன்பாடு என்று பொருள். இன்றும் கிராமங்களில் மேடு - பள்ளங்களைச் சமப்படுத்துவதை ஒப்பரவு செய்தல் என்று கூறும் வழக்கம் இருந்து வருகிறது. எனவே இருப்பவர்கள் இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவுவதே ஒப்புரவு ஆகும். உலக நடைமுறையைப் பின்பற்றி நாம் வாழ வேண்டும். இதை ஒப்புரவு ஒழுகு என்று ஔவையார் தமது ஆத்திசூடியில் கூறியுள்ளார். இதன் பொருள் சமுதாயத்தின் நியாயமான சட்ட திட்டங்களுக்கு ஏற்ற வகையில் வாழ்வதற்குப் பழகு. திருக்குறளில் 22 ஆம் அதிகாரம் ஒப்புரவறிதல் என்ற தலைப்பில் அமைந்துள்ளது. இதில் ஒப்புரவு என்ற சொல். 1. சமுதாய நலன் பொருட்டுச் செய்யப்படும் தொண்டு - நற்செயல்கள், 2. பிரதிபலனை எதிர்பாராமல் பிறருக்குத் தானம் வழங்குதல், 3. பிரதிபலனை எதிர்பாராமல் மற்றவர்களுக்கு உதவி செய்தல் ஆகிய பொருளில் அமைந்துள்ளது.