சிவனுக்கு நான்கு கால பூஜை
ADDED :3514 days ago
கோவை : மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, சிவனுக்கு நான்கு கால சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கோவை, கோல்டுவின்ஸ், துரைசாமி நகரில், தம்புரான் கோவில் அமைந்துள்ளது. இங்கு மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு முதல் சிவனுக்கு பூஜைகள் செய்யப்பட்டன. சங்கு அபிஷேகம், 108 இளநீர் அபிஷேகம், 108 பன்னீர் அபிஷேகம் என, நான்கு கால சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று காலை வரை சிவனுக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் விழாவில் பங்கேற்றனர்.